SuperTopAds

அதிகளவான கொரோனா தொற்றாளர்களாக இளைஞர்கள்..! காற்றில் பரவுகிறது வைரஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
அதிகளவான கொரோனா தொற்றாளர்களாக இளைஞர்கள்..! காற்றில் பரவுகிறது வைரஸ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதிர்ச்சி தகவல்..

இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிகளவில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன கூறியிருக்கின்றார். 

தொடர்பு மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு அப்பால் தற்போது காற்றின் மூலமும் இத்தொற்று பரவுவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொரோனா வைரஸின் புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமல்ல இளைஞர்களையும் பாதிக்கும் என்று 

கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு “ஸ்பூட்னிக் வி”  தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. இதேவேளை பேராசிரியர் நீலிகா மாளவிகே, 

கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளது. முந்தைய திரிபு ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு பரவக்கூடியது என்பதுடன் புதிய திரிபானது ஒருவரிலிருந்து 5-6 பேர் வரை பரவக்கூடியது எனக் கூறியுள்ளார்.