பொலிஸ் நிலையத்திற்குள் பெண் கழுத்தறுத்து கொடூர கொலை!! -சம்பவ இடத்திலேயே கொலையாளியை சுட்ட பொலிஸ்-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீசில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்த நபரை பொலிஸர் சுட்டுக் கொன்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துனிசிய நாட்டைச் சேர்ந்தவராலேயே இக் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் பிரான்சில் முறையான ஆவணங்களுடன் வசித்து வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.