SuperTopAds

அத்தியாவசிய தேவைகளுக்காக இருவர் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி..! இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது..

ஆசிரியர் - Editor I
அத்தியாவசிய தேவைகளுக்காக இருவர் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி..! இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது..

நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருக்கும் நிலையில் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார வழிகாட்டுதல் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 31 ஆம் திகதிவரை பொது மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிமுறைகள் குறித்த அறிவிப்பே இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய செயற்பாடுகளுக்காக வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு 

இரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 

கார் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், தேவைக்கு ஏற்றவாறு பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தவும் பல சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கான செயற்றிட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.