3 வாரங்களுக்கு பாடசாலைகளை முடக்குவது குறித்து ஆராய்கிறோம்..! கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது, அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ புள்ளே விளக்கம்..

ஆசிரியர் - Editor I
3 வாரங்களுக்கு பாடசாலைகளை முடக்குவது குறித்து ஆராய்கிறோம்..! கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது, அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ புள்ளே விளக்கம்..

நாடு முழுவதும் பாடசாலைகளை முடக்குமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய், கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ புள்ளே கூறியுள்ளார். 

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை மூன்று வாரங்களுக்கு மூடுவது தொடர்பான யோசனை குறித்து ஆராயப்படுவதாக பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்படும் என அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் பாடசாலைகளை மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயங்குகிறார்கள் 

என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு