SuperTopAds

வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்தபோது மணமகன், மணமகளுக்கு கொரோனா..! 150 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்தபோது மணமகன், மணமகளுக்கு கொரோனா..! 150 பேர் தனிமைப்படுத்தலில்..

திமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 150 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வத்தளை - ஹெந்தளைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தின் பின்னர் மணமகன் வெளிநாடு செல்வதற்காக 

பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளார். இதன் காரணமாக குறித்த மணப்பெண்ணுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 

அவரும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். தம்பதியினருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 

மற்றும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது.இதனால் சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி, 

திருமண வைபவத் தில் கலந்துகொண்ட 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேரின் 

முகவரிகளைச் சுகாதார அதிகாரிகள் பெற்றுக்கொண்டு இது தொடர்பாகத் தகவல் விடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.