இந்தோனேசியா இராணுவத்தின் 53 பேருடன் திடீரென மாயமான நீர்மூழ்சி கப்பல்!! -பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திகைப்புச் சமப்வம்-
இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே அந்த நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான “நங்கலா 402” என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
குறித்த நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் இருந்தனர். குறித்த கப்பல் பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பயணித்துக் காண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது, அதில் உள்ள 53 வீரர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதையடுத்து அங்கு போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இராணுவ தளபதி தஜ்ஜான்டோ கூறினார்.