SuperTopAds

முல்லைத்தீவில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரிப்பு.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரிப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதமடுக் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாகவும் தினமும் பெருந்தொகையான தென்னை மரங்கள் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளை யானைகள் அழித்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மருதமடுககிராமத்தில் அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுகின்றது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காட்டுயானைகளால் அறுபதிற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பயன்தரக்கூடிய நிலையில் இருந்த தென்னைமரங்கள் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் அவை காட்டுயானைகளாலும் வறட்சியினால அழிவடைந்த நிலையில் மீள்குடியமர்வின் பின்னர் தமது காணிகளுக்குள் நடுகை செய்யப்பட்ட இவ்வாற தென்னை மரங்கள் யானைகளால் அழிக்கப்பட்டு வருவதாகவம் இப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.

இ;ப்பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் காட்டுயானைகள் ஊர் மனைகளுக்குள் புகுந்து பயன்தரு மரங்களை அழித்து வருகின்றது.

இவ்வாறு காட்டுயானைகளின் தாக்கத்;திருந்த தமது கிராமங்களைப்பாதுகாக்கும் வகையில் யானைவேலிகளை அமைத்துத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.