300ற்கும் அதிக பேரக்குழந்தைகளுடன் வசித்த மூதாட்டி 116 வயதில் காலமானார்!!
அமெரிக்காவில் மாகாணத்தில் 300ற்க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் வசித்துவந்த 116 வயது மூதாட்டி காலமானார்.
அமெரிக்காவின் மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான, ஹெஸ்டர் போர்டு கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார். அவர் கடந்த 1905 அல்லது 1904 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
14 வயதில் ஜான் போர்டு என்பவரை திருமணமான செய்து கொண்ட ஹெஸ்டருக்கு, 14 குழந்தைகளும், 68 பேரக்குழந்தைகளும், 125 கொள்ளுப் பேரக்குழந்தைகளும், 120ற்க்கும் மேற்பட்ட எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.