இப்போது தான் நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம்!! -கொல்லப்பட்ட அமெரிக்க கறுப்பினர்தவரின் சகோதரர் மகிழ்ச்சி-
அமெரிக்க கறுப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் பொலிஸ் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினிபோலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இப் கொலை வழக்கில் பொலில் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினிபோலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து ஜார்ஜின் இளைய சகோதரர் பிளோனிஸ் பிளாய்ட் கூறியதாவது:-
இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜார்ஜூக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை. இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி.
அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது. என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி சர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்துவிடக்கூடாது என நினைத்தேன். இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம் என்றார்.