SuperTopAds

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க பொலிஸார், இராணுவம் தடை.

ஆசிரியர் - Editor I
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க பொலிஸார், இராணுவம் தடை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடியைக்கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரும் இராணு வமும் தடையாக இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் சமாச நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் சட்டத்திற்கு முரணான தொழில் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேறகொள்ளப்படுகின்றன.

இதனைக்கட்டுப்படுத்துமாறு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய மாகாண அரசுகளுக்குக்கூட இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லைஎன்று தெரிவித்துள்ள சமாசம் தற்;போது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளிலும் குறிப்பாக சிறுகடல் பகதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதத்தொழில்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதும்,

 பொலிசாரும் இராணுவமும் இதற்குத்தடையாக இருப்பதாகவும் இவர்களது செயற்பாடுகள் சட்டவிராதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.