பொது மக்களை சித்திரவதை செய்யும் இராணுவம்!! -மியான்மாரில் தொடரும் மனித பேரவலம்-
மியான்மரில் நடந்துவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் இராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை மியான்மர் இராணுவம் கைது செய்து வருகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை கொடூரமான தாக்குதல் மற்றும் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கும் கொடூர செயலில் hணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் 6 இளைஞர்களின் புகைப்படங்களை மியான்மர் இராணுவத்தின் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இராணுவத்தால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் முகங்கள் கடுமையாக தாக்கப்பட்டு இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுக்கு இது தான் நிலைமை என எச்சரிக்கும் வகையில் மியான்மர் ராணுவம் இந்த இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மியான்மர் இராணுவத்தால் நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.