SuperTopAds

சில மாதங்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்!! -கூறுகிறது உலக சுகாதார அமைப்பு-

ஆசிரியர் - Editor II
சில மாதங்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்!! -கூறுகிறது உலக சுகாதார அமைப்பு-

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்த சில மாதங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் சில மாதங்களில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து சாதனங்களும் இப்போது உலக நாடுகளிடம் உள்ளது.

அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். செல்வம் பொருந்திய நாடுகள் இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தேவை அதிகமான இடங்களுக்குத் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.