யாழ்.தெல்லிப்பழைய யூனியன் கல்லுாரி விவகாரத்தில் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவினின் நிலைப்பாடு என்ன? கொதிநிலை துாண்டப்படுகிறதா..? நடப்பதுதான் என்ன?

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழைய யூனியன் கல்லுாரி விவகாரத்தில் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவினின் நிலைப்பாடு என்ன? கொதிநிலை துாண்டப்படுகிறதா..? நடப்பதுதான் என்ன?

யாழ்.தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி விவகாரத்தில் மாகாண கல்வியமைச்சு அசமந்தமாக உள்ளதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 

கடந்த வாரம் யூனியன் கல்லூரிக்கும் தென்னிந்திய திருச்சபையின் சிலோன் அமைப்பினருக்கும் இடையில் உரிமை கோரப்படும் கட்டடம் தொடர்பில் இதுவரை உருப்படியான தீர்மானங்களை ஏதும் எடுக்கப்படவில்லை 

1961-1962 வர்த்தகமானி அறிவித்தலின் பிரகாரம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. பொறுப்பேற்கப்பட்ட காலத்தை தொடர்ந்து 

யூனியன் கல்லூரி எவ்வித இடையூறுமின்றி நடந்தது. 2019 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குறித்த கல்லூரிக்கும் அதன் வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த பழைமை வாய்ந்த குரு மனையாகவும் 

அதிபர் மனையாகவும் இருந்த இடத்தை தென்னிந்திய திருச்சபையின் சிலோன் அமைப்பினர் உரிமை கோர தொடங்கியபோதே பிரச்சனைகள் எழுந்தன.

பிரச்சனைகள் நாளுக்கு நாள் முற்றி கடந்த 9ஆம் திகதி பூதாகரமாகி எல்லோருடைய கவனத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. 

இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவத்தையும் 

அதனடிப்படையில் வெளியான செய்திகளை பார்த்துக் கவலை அடைந்தேன். தென்னிந்திய திருச்சபையின் பேராயராக நான் இருக்கின்ற நிலையில் எம்மில் இருந்து பிரிந்த சிலர் 

தமக்கான ஒரு சபையை ஆரம்பித்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியுடன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தென்னிந்திய திருச்சபையுன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள் அவர்கள் தொடர்பில் வடக்கு கல்விச் செயலாளர் எல்.இளங்கோவனுக்கு தெரியப்படுத்தியும் 

எம்முடன் பேசி சுமுகமான முடிவை எடுக்க முயற்சிக்கவில்லை தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராயா தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்றுவரும் பிரச்சினைக்குரிய இடமான 

அமெரிக்க மிஷன் குருமார்கள் தங்கிய வீட்டின் அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளது எனத் தெரிவிக்கிறார். அரசாங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் யூனியன் கல்லூரி க்கு உரிய இடம் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 

அதனை தென்னிந்திய திருச்சபையினரும் அதிலிருந்து பிரிந்த தென்னிந்திய திருச்சபையின் சிலோன் அமைப்பினரும் உரிமை கோருகிறார்கள். இவர்களது உரிமம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு காட்டிவரும் அசமந்த போக்கு மத முரண்பாட்டை உருவாக்கும். 

கடந்த 9ஆம் திகதி தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மாறிமாறி இடம்பெறுவது தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமான விடயமல்ல இதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் உரிய முறையில் தீர்த்து வைப்பது அவர்களது கடமையாகும்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு