யாழ்.மாவட்ட மக்களுக்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் 15.23 மில்லியன் ஒதுக்கீடு..!

யாழ்.மாவட்டத்தில் இவ்வாண்டு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 15.23 மில்லியன் ரூபாய் நிதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளர்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இம்மாதம் வரை 1784 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 600 பேர் தொடர்ந்தும் சுய தனிமை படுத்த பட்டுள்ளதுடன் 500 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.
மேலும் கொவிட் தொற்றினால் சுய தனிமைப்படுத்தப்பட்ட 490 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 4.9மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்
அவர்களுக்கும் அதனை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.