பிரிட்டனில் ஒரு மாதத்திற்கு பின் தளர்த்தப்பட்டது முடக்கல் உத்தரவு!! -வர்த்தக நிலையங்களில் கூடிய மக்கள்-
பிரிட்டனில் கடந்த ஒரு மாத காலமாக அமுலில் இருந்த சமூக முடக்கல் உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த தளர்வினை அடுத்து அங்குள்ள உணவகங்கள், கடைகள், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டன.
ஒரு மாத முடக்கத்துக்குப் பின்னர் வெளியே வந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி உற்சாகத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்தனர். மதுபான நிலையங்கள், உணவகங்களிலும் ஒரு மாதத்துக்குப் பின்னர் மக்கள் கூடியுள்ளனர்.
தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரித்தானிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.