பணியின் போது பாலியல் தொல்லை!! -கூகுள் நிறுவனத்தின் 500ற்க்கும் மேற்பட்ட பெண்கள் ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம்-
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் 500ற்க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், தமக்கு பாலியல் தொல்லை இடம்பெறுவதாக குறிப்பிட்டு அந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அந்நிறுவன பெண் பணியாளர்கள் எழுதிய கடித்தில் கூகுள் நிறுவனம் பெண்களை துன்புறுத்துபவர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு, பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.