மியான்மரில் போராட்டத்தில் 82 பேர் சுட்டுக்கொலை!! -100ற்கும் மேற்பட்டவர்கள் காயம்-
மியான்மரின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான யாங்கூன் அருகிலுள்ள பாகோ நகரில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்.
அவர்களை தடுத்து நிறுத்திய இராணுவம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பேரணியாக சென்றவர்களை விரட்டியடிக்க முற்பட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறி சென்றனர்.
இதையடுத்து இராணுவம், போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 82 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100ற்க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.