யாழ்.வலி,வடக்கில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் சிக்கியது..! ஒன்றரை வருடங்களாக திருடப்பட்ட பல பொருட்கள் மீட்பு..

யாழ்.வலி,வடக்கில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவு பொருட்களும் மீட்கப்பட்டிருக்கின்றது.
15 நீர் இறைக்கும் இயந்திரங்கள், வாகன சுத்தீகரிப்பு இயந்திரங்கள், புல்வெட்டும் இயந்திரம், உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டிருக்கின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் ஒன்றரை வருடங்களாக திருடிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.