சித்திரை புத்தாண்டு காலத்தில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் எழுமாற்று பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை..! இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சித்திரை புத்தாண்டு காலத்தில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் எழுமாற்று பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை..! இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு..

சித்திரை புத்தாண்டு காலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு முழுவதும் இந்த எழுமாறாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். எனவே அனைத்து மக்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்பட்ட 

சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தற்போது சராசரியாக கொரோனா தொற்று உறுதியான 200 பேர் அடையாளம் காணப்படுவதாக குறிப்பிட்ட அவர் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதனால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரை தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு