மர்ம நபர்களின் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்கள்
தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் சிலர் மர்ம நபர்களின் துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த துப்பாக்கிதாரர்கள் அங்காடியினுல் நுழைவதற்கு முன்னர் அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
தற்போது துப்பாக்கிதாரர்களால் பணயக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை வெளியில் கொண்டுவர நடவடிக்கைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிதாரர்கள் ஐ.எஸ் தீவிரவாத குழுவினராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.