பிரிட்டன் ராணியின் கணவர் 99 வயதில் காலமானார்!!
பிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் தனது 99 ஆவது வயதில் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.
அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த பிப்ரவரியில், இதயக் கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சைக்குப் பின், அரண்மனைக்கு திரும்பியிருந்த இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் காலமானார்.