யாழ்.மாநகர வர்த்தகர்கள், பணியாளர்களுக்கு யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர வர்த்தகர்கள், பணியாளர்களுக்கு யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள அறிவிப்பு..!

யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளாத வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலைய பணியாளர்கள் நாளை காலை துரையப்பா விளையாட்டரங்கில் செய்து கொள்ளலாம். 

மேற்படி தகவலை யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வழங்கியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை காலை துரையப்பா விளையாட்டரங்கில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்நிலையில் 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ளாத வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இதுவரை பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தவறியவர்களும் பரிசோதனை செய்து கொள்ளலாம். 

Radio