யாழ்.பருத்துறை - கற்கோவளம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்றிருந்த 3 மீனவர்களை காணவில்லை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை - கற்கோவளம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்றிருந்த 3 மீனவர்களை காணவில்லை..!

யாழ்.பருத்துறை - கற்கோவளம் பகுதியிலிருந்து நேற்றய தினம் கடற்றொழிலுக்கு சென்றிருந்த 3 மீனவர்கள் காணாமல்போயுள்ளதாக பருத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

கற்கோவளம் பகுதியிலிருந்து நேற்றய தினம் கடற்றொழிலுக்கு சென்றிருந்த குறித்த மீனவர்கள் இன்று காலை 8 மணியளவில் கரை திரும்பியிருக்கவேண்டிய நிலையில் அவர்கள் கரை திரும்பவில்லை. 

இந்நிலையில் காலை 10 மணிவரை அவர்களை எதிர்பார்த்திருந்த மீனவர்கள் அவர்கள் கரை திரும்பாத நிலையில் கடலுக்குள் சென்று தேடியபோதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனையடுத்து பருத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், காணாமல்போனவர்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Radio