யாழ்.மாநகரில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்படும்..! இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் 8 மணிவரை இடம்பெறும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்படும்..! இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் 8 மணிவரை இடம்பெறும்..

யாழ்.மாநகர வர்த்தக நிலையங்கள் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனவும் 10 மணிவரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். எனவும் யாழ்.வணிகர்கழக தலைவர் இ.ஜெயசேகரம் கூறியுள்ளார். 

மேலும் யாழ்.மாநகர பகுதியிலிருந்து இரவு 8 மணிவரை இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவை இடம்பெறும் எனவும் வணிகர்கழக தலைவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக யாழ்.மாநகரம் முடக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டிருக்கும் நிலையில், 

பொதுமக்களின் நன்மை கருதியும், சித்திரை புத்தாண்டை ஒட்டியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார். 

Radio