நடிகை நக்மாவுக்கு கொரோனா!! -தடுப்பூசி போட்ட பின்னும் தொற்றிக் கொண்டது-
இந்தியாவின் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.