யாழ்.மாநகர காவல்படை தொடர்பாக எமக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை..! சபை அமர்வை புறக்கணித்தது ஈ.பி.டி.பி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர காவல்படை தொடர்பாக எமக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை..! சபை அமர்வை புறக்கணித்தது ஈ.பி.டி.பி..

யாழ்.மாநகர காவல்படை தொடர்பாக தமக்கு எந்தவொரு விடயமும் அறிவிக்கப்படவில்லை. என கூறி ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்திருக்கின்றனர். 

இதுதொடர்பாக மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்கு 

சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்பதற்காக சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் தலைமை தீர்மானித்திருந்தது.

எவ்வாறெனினும், எமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்காண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாக எம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீக கடமையாகும். ஆனால் காவல்படை உருவாக்கம் தொடர்பாக எம்மோடு கலந்துரையாடப்படவில்லை. 

து தொடர்பில் எமது கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலேயே இன்றைய அமர்வுகளை புறக்கணித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Radio