யாழ்.வடமராட்சி கிழக்கில் உள்ள அரச திணைக்கள ஊழியர் ஒருவர் கைது..! அரசியல்வாதி பெயரை பயன்படுத்தி பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் உள்ள அரச திணைக்கள ஊழியர் ஒருவர் கைது..! அரசியல்வாதி பெயரை பயன்படுத்தி பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என சந்தேகம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள அரச திணைக்கள பணியாளர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுடைய பெயர்களை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உதவி பெற்றுத்தருவதாக கூறிய குறித்த நபர் 

பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளதுடன் அவரை துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அரசியல்வாதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில், தொடர்ச்சியாக உரையாடி தகவல்களை பெறுமாறு

குறித்த அரசியல்வாதி அறிவுறுத்தியதுடன், சம்மந்தப்பட்ட நபரை மடக்கி பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். 

இதனடிப்படையில் பொலிஸாரின் உதவியுடன் சம்மந்தப்பட்ட அரச பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார். 

Radio