யாழ்.மாநகர காவல்படை பணிகள் நிறுத்தம், சீருடை ஒப்படைக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர காவல்படை பணிகள் நிறுத்தம், சீருடை ஒப்படைக்கப்பட்டது..!

பொலிஸாரின் பணிப்பிற்கமைய யாழ்.மாநகர காவல் படையின் சீருடைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காவற்படையின் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மநகரில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்படுவதை உறுதி செய்து யாழ்.மாநகரை துாய்மையாக வைத்திருக்கும் நோக்கில் மாநகர காவல்படை

மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த காவல்படையின் சீருடைய விடுதலை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாக

உள்ளதெனவும், பொலிஸாருக்கு நிகராக இந்த காவல்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டதாக கூறிய பொலிஸார், 

பணிகளை நிறுத்துமாறும், சீருடையை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தனர். இதற்கமைய சீருடை ஒப்படைக்கப்பட்டதுடன், காவல்படை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

Radio