யாழ்.மாநகர காவல்படை பொலிஸாருக்கு நிகராக உருவாக்கப்பட்டதா..? சகல பணிகளையும் நிறுத்துங்கள் மாநகரசபைக்கு பணிப்பு..

யாழ்.மாநகர காவல் படையின் பணிகள் அனைத்தையும் நிறுத்தும்படி யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு நிகராக யாழ்.மாநகர காவல்படை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்ததான சீருடையை அவர்கள் அணிந்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்.மாநகரசபை ஆணையாளர் நேற்றிரவு யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து யாழ்.மாநகர காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருத்தார்.