யாழ்.திருநெல்வேலி சந்தை முடக்கம் எப்போது நிக்கப்படும்..? மாகாண சுகாதார பணிப்பாளர் அளித்துள்ள விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தை முடக்கம் எப்போது நிக்கப்படும்..? மாகாண சுகாதார பணிப்பாளர் அளித்துள்ள விளக்கம்..

யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்பே சந்தையை மீள திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும். 

மேற்கண்டவாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் 

திருநெல்வேலி சந்தை மற்றும் பாற்பண்ணை பகுதி முடக்கப்பட்டிருக்கின்றது. குறித்த பகுதகளின் விடுவிப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சந்தை வர்த்தகர்கள் மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெறப்பட்டதன் பின்பே முடக்கம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும். 

மிக விரைவில் 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். என பணிப்பாளர் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு