யாழ்.நாவற்குழியில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தாக்குதல்..

யாழ்.நாவற்குழியில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் மீது அச்சுறுத்தல் மற்றும் சமூக வலைததளங்கள் ஊடான தாக்குதல் ஆகியன இடம்பெற்றதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது. 

குற்றவியல் விசாரணையாளர்கள் அதிகளவிற்கு இலங்கையில் துன்புறுத்தப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை தனது வருடாந்த மனித உரிமை அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணிகள் அச்சுறுத்தல்களையும் சமூக ஊடங்களில் தாக்குதல்களையும் எதிர்கொண்டனர். 

என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.குறிப்பாக 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை நாவற்குழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டனர். 

என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புசபை படையினரே இந்த வழக்குகளில் குற்றவாளிகளாக காணப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு