53 ஆசனங்கள் கொண்ட பயணிகள் பேருந்துடன் நகருக்குள் நுழைந்த 15 வயது சிறுவன்..! சிறுவனும், தந்தையும் கைது..
53 பயணிகளை ஏற்றக்கூடிய பேருந்தை ஓட்டிய 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனார்.
குறித்த சம்பவம் மித்தெனிய என்ப இடத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸை,
தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை
தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.