SuperTopAds

ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் மீது தாக்குதல்..! பிரதேசசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் மீது தாக்குதல்..! பிரதேசசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது..

ரயில் கடவை காப்பாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் கண்டி - பெரதேனியா ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில் கடவை மூடப்பட்டிருந்த போது, 

அதனூடாக பயணிக்க முயற்சித்த சந்தேகநபர்களுக்கும் ரயில் கடவை காப்பாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, தாக்குதலுக்கு இலக்கான ரயில் கடவை காப்பாளர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கண்டி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.