சித்திரை புத்தாண்டு காலத்தில் நாடு முடப்படுமா? இராணுவ தளபதி விளக்கம், மாவட்டங்களுக்கிடையிலான பயணத்தின்போது ஏழுமாற்று அன்டிஜன் பரிசோதனை..
சித்திரை புத்தாண்டில் நாட்டை முழுமையாகவோ, பிரதேசவாரியாகவோ முடக்கும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
மேலும் சித்திரை புத்தாண்டு கால சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கோவிட் ஒழிப்பிற்காகவும், தொற்று பரவுவதைத் தடுக்கவும் விசேட எழுமாற்றான அன்டிஜன் பரிசோதனையை நடத்தப்படவுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ´ஸ்புட்னிக் V´ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.