புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை விளக்கமறியலில் மரணம்..!
குளியாபிட்டிய பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜை விளக்கமறியலில் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு நேற்றிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் வாரியபொல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய திலீப் குமார் என்பவர் ஆவார்.
இந் நிலையில் அவரது உடல் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
பிரேத பரிசோதனைக்காக குருணால் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.