சிறந்த நிர்வாகசேவை அதிகாரி சிவஞானசோதி மறைந்தார்..!

சிறந்த நிர்வாகி வே.சிவஞானசோதி கொழும்பு - அப்பலோ வைத்தியசாலையில் இயற்கை எய்தியுள்ளார்.
யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி பல அமைச்சுக்களில் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி,
நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றில் செயலாளராகவும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இறுதியில் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான
ஐனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றானார். தனது அரச சேவைக் காலத்தில் வடக்கு மக்களுக்கா பல அரச வரப்பிரசாதங்களை
பெற்றுக் கொடுத்தவர் குறிப்பாக வடகிழக்கு பொருத்து வீட்டுத்திட்ட விவகாரத்தில் தன்னை நேர்மையான அதிகாரியாக வெளிப்படுத்தியவர். என்பது குறிப்பிடதக்கது.