யாழ்.பொம்மைவெளியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் பணத்துடன் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கைது..!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சுமார் ஒரு கிலோ 750 கிராம் கஞ்சாவுடன் 35 வயதான ஆண் ஒருவரும், பொம்மைவெளி 8ம் குறுக்கு தெருவை சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் 5 கிராம் 750 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின் யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.