ஒரு துண்டு நிலத்தையும் இராணுவத்திற்கு வழங்கமாட்டோம்..! சுட விரும்பினால் தாரளமாக சுடலாம், A-9 வீதியை மூடி நில அளவைக்கு எதிராக போராட்டம்..

ஆசிரியர் - Editor I
ஒரு துண்டு நிலத்தையும் இராணுவத்திற்கு வழங்கமாட்டோம்..! சுட விரும்பினால் தாரளமாக சுடலாம், A-9 வீதியை மூடி நில அளவைக்கு எதிராக போராட்டம்..

யாழ்.மிருசுவில் பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர். 

இன்று காலை தொடக்கம் நில அளவையாளர்களை எதிர்த்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலமையில் ஏ-9 வீதியை வழிமறித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

எம்.கே.சிவாஜிலிங்கம் இதன்போது கருத்து தொிவிக்கையில், நிலஅளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. விரைவில் உங்கள் அலுவலகத்தை முடக்கி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

அது மட்டுமல்லாது எமது தன்மானத்தை இழந்து வாழ நாங்கள் விரும்பவில்லை ராணுவ முகாமுக்கு முன்னால் தான் இருக்கிறோம். சுட விரும்பினால் சுடலாம் நீர் வீச வேண்டும் என்றால் வீசலாம் எதற்கும் மானமுள்ள தமிழன் அஞ்சமாட்டான் என தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான கஜதீபன், விந்தன் கனகரத்தினம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சாவகச்சேரி பிரதேச சபை பிரதி தவிசாளர் மயூரன், 

தென்மராட்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் கிஷோர், தீவக சிவில் அமைப்பின் ஏற்பாட்டாள் குணாளன் மற்றும்மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு