யாழ்.கொழும்புத்துறையில் உள்ள வீடொன்றின் மீது இனந்தொியாத குழு தாக்குதல்..!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் வீடொன்றின் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. கொழும்புத்துறை விதானையார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நுழைந்த கும்பல் ஒன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் தனிப்பட்ட பிரச்சினையே தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாம். எனவும் கூறப்படுகிறது.