யாழ்.வடமராட்சி கிழக்கில் தனிமையிலிருந்த 23 வயதான இளைஞன் சடலமாக மீட்பு..! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. குடத்தனை - தரவை பகுதியை சேர்ந்த மு.சுலக்சன்(வயது23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பருத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.