இலங்கை பிரஜை ஒருவருக்கு கூட சீன தடுப்பூசி ஏற்றப்படகூடாது..! இலங்கை மருத்துவசபை சுகாதார அமைச்சருக்கு கடிதம்..
தேசிய மருத்துவ ஒருங்குபடுத்தல் அதிகாரசபையின் ஒப்புதல் பெறாமல் சீனா நன்கொடையாக வழங்கிய சினோபார்ம் தடுப்பூசி ஒரு இலங்கை பிரஜைக்கு கூட செலுத்தப்படகூடாது. என இலங்கை மருத்துவ சபை வலியுறுத்தியிருக்கின்றது.
சீனா நன்கொடையாக வழங்கிய சினோபார்ம் தடுப்பூசி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் இலங்கை மருத்துவசபை சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஒப்புதலை பெறாமல் ஒரு இலங்கை பிரஜைக்கு கூட சீன தடுப்பூசியை ஏற்றகூடாது. என மருத்துவ சபை வலியுறுத்தியிருக்கின்றது.