SuperTopAds

அமெரிக்க பாராளுமன்ற காவலரண் மீது காரால் மோதி தாக்குதல்!! -ஒரு பொலிஸ் பலி: தாக்குதல் நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்-

ஆசிரியர் - Editor II
அமெரிக்க பாராளுமன்ற காவலரண் மீது காரால் மோதி தாக்குதல்!! -ஒரு பொலிஸ் பலி: தாக்குதல் நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்-

அமெரிக்க பாராளுமன்ற வளாக பாதுகாப்பு காவலரண் மீது காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்தார்.

பாராளுமன்ற பாதுகாப்பு காவலரண் மீது காரால் மோதித் தாக்குதல் நடத்திய நபர் பின்னர் காரில் இருந்து குதித்து பொலிஸாரை கத்தியாலும் குத்தியுள்ளார்.

இவ்வாறு தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்தத் தாக்குதலில் வில்லியம் பில்லி எவன்ஸ் என்ற 18 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே கொல்லப்பட்டவராவார்.

இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர் இந்தியானாவைச் சேர்ந்த 25 வயது நோவா கிரீன் என்ற 25 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.