SuperTopAds

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்..! தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு..

ஆசிரியர் - Editor I
நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்..! தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு..

பயங்கரவாத கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

காத்தான்குடி மட்டக்களப்பை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 21ம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்களே இவர்கள் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வஹாபிசத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புவதற்காக வட்ஸ்அப்பினை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த குழுவை சேர்ந்த நால்வர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிம் தொழுகையில் ஈடுபடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர் என  பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.