யாழ்.மாவட்டத்தில் மேலும் 17 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது..! கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அங்கஜன் நேற்று ஆய்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 17 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் தரம் உயர்த்தப்படுகிறது..! கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அங்கஜன் நேற்று ஆய்வு..

யாழ்.தீவக பாடசாலைகள் உட்பட மாவட்டத்தில் 17 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கான கலந்துரையல் இன்று வியாழக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டத்தின் கஷ்டப்பட்ட பிரதேசங்களான தீவகம் மற்றம் மருதங்கேணி பகுதிகளின் எதிர்காலக் கல்வியை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் தீவகத்தில் 3 பாடசாலைகளும் மருதங்கேணியில் ஒரு பாடசாலையையும் 

தேசிய பாடசாலை ஆக்கப்படவுள்ளது.யாழ் புங்குடுதீவு மகா வித்தியாலயம், அனலைதீவு சதாசிவ வித்தியாலயம், புங்குடுதீவு பெண்கள் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளே 

இவ்வாறு விசேடமாக தரம் உயர்த்தப்பட உள்ளது.ஆகவே இவ் வருடம் 2021 நிறைவடைய முன்னர் 17 பாடசாலைகளையும் தேசிய பாடசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு