கசிப்பு காய்ச்சியவர்களை கண்டுகொள்ளாமல் விடச்சொன்ன இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ..! தட்டி கேட்ட பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்..
கசிப்பு காய்ச்சியவர்களை விடுவிக்கும்படி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கூறியிருந்த கருத்தை நிராகரித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. வென்னப்புவ - தங்கொட்டுவ பகுதியில் கசிப்பு காய்ச்சிய சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதனையடுத்து பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கு தொடர்பு கொண்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அவர்கள் சிறிய அளவில் கசிப்பு காய்ச்சுகிறார்கள் எனவும்,
சிறியளவில் செய்கிறார்கள். அவர்கள் பாவம் அவர்களை கணகெடுக்காமல் விடுங்கள் என கூறிய நிலையில் நக்கல் சிரிப்புடன் சின்ன வியாபாரம், பொிய வியாபாரம் எண்டு
எப்படி பார்ப்பது? என கேள்வி எழுப்பயதுடன், பொலிஸ் அதிகாரிகளையே மிரட்டும் அளவுக்கு பொிய வியாபாரிகள் இருக்கும் நிலையில் அவர்களை என்ன செய்வது என கேட்டுள்ளார்.
இதனால் முரண்பாடு உருவாகியுள்ளது. இதனையடுத்து பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பேசும்
குரல் பதிவு வெளியாகியுள்ள நிலையில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.