யாழ்.மருதங்கேணிக்கு புதிய பொலிஸ் நிலையம்..! திறந்துவைக்க யாழ்.வருகிறார் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர..
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்துவைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர நாளை வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
மருதங்கேணி மற்றும் காரைநகர் பகுதிகளுக்கு தனியான பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். என பல்வேறு அபிவிருத்தி கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் பங்குபற்றிய
மருதங்கேணி பிரதேச செயலகம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடல்களில் குறித்த பகுதிக்கான தனியான பொலிஸ் நிலையம் தொடர்பான கோரிக்கைகள் வலுப்பெற்று வந்தது.வடமராட்சி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும்
சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பொலிஸ் நிலையம் அமைப்பது தொடர்பான தேவைப்பாடு உணரப்பட்டது.மேலும் பொது மக்கள் தமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பளை
மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் அதிக தூரமும் வீண் அலைச்சலும்கும் ஆளாக வேண்டி ஏற்பட்டது.மருதங்கேணி மாற்றும் காரைநகர் பகுதிக்கான தனியான பொலிஸ் நிலையம் அமைத்துத் தருமாறு பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
மக்கள் கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில்மருதங்கேணி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகு தற்போது விடிவு கிடைத்துள்ளது.இதன் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட செம்பியன்பற்று வடக்கில் இருந்து சுண்டிக்குளம் பகுதி வரையான 10 கிராம சேவையாளர் பிரிவுகள்
புதிய பொலிஸ் நிலையதின் கீழ் உள்ளடக்கப் படுகின்றனர்.ஆகவே எதிர்காலத்தில் பருத்தித்துறையின் சில பகுதிகளையும் புதிய பொலிஸ் பிரிவின் கீழ் இணைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளன.