கொரோனா தொற்றிலிருந்து அதிகளவானோர் குணமடையும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்..!
கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி விரைவில் குணமடைவோர் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
இதன்படி இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இந்தியா 2ஆம் இடத்திலும் ரஷ்யா 3ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் இதுவரையில் 92 ஆயிரத்து 442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 90 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில்,
தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 786 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேநேரம்,
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 566 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.