SuperTopAds

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசல்!! -உடல் நசுங்கி 45 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசல்!! -உடல் நசுங்கி 45 பேர் பலி-

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுக்களில் சிக்கி 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 

கடந்த வாரம் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதியின் உடலைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலர் அவர் உடலைக் காண சுவர்களின் மீதும் ஏறி நின்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நெரிசல் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்து மிதிபட்டு நசுங்கினர். இதனைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் முன்னாள் அதிபரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.