கப்பல் எவ்வாறு சிக்கியது? -ஆரம்பமானது விசாரணை-
எகிப்தின் சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் எவ்வாறு சிக்கிக் கொண்டது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் தரைதட்டியதற்கான காரணங்களை ஆராய்வதற்காக, கப்பல் துறை நிபுணர்கள், அந்த சரக்கு கப்பலில் ஆய்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர்.
அடுத்த சில நாட்களுக்கு இந்த ஆய்வுகள் நடக்கும் என்பதால், தற்போதைக்கு, இந்தக் கப்பல், சூயஸ் கால்வாய் பகுதியிலே நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.