SuperTopAds

மக்கள் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு!! -510 பேரை மிருகத்தனமாக கொன்ற மியான்மரில் இராணுவம்-

ஆசிரியர் - Editor II
மக்கள் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு!! -510 பேரை மிருகத்தனமாக கொன்ற மியான்மரில் இராணுவம்-

மியான்மரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 14 மக்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்துள்ளது. 

இத்தகவலை அந்நாட்டு அரசியல் கைதிகளுக்கான சட்டத்தரணிகள் குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று இரவு மெழுவர்த்திகளை ஏற்றி வணக்கம் செலுத்தினர்.